Monday, 1 June 2015

இசைக்கு உயிர் கொடுத்த இசைஞானியின் பிறந்த நாள் இன்று..!


இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயம் நம்மூர் இசைஞானி இளையராஜாவின் பெயர் முன்னிலையில்தான் இருக்கும்... தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தவரான இளையராஜாவின் இயற்பெயர் ராசய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
’அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் 1976இல் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளையராஜா, தொடர்ந்து இன்று வரை இசை அமைத்து வருகிறார். முதல் படம் வெளியாகி மூன்றாண்டுகள் முடிவதற்குள், 100 படங்களைத் தொட்டிருந்தார் இளையராஜா. எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சாதனை இது.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 1002 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. தமிழ் சினிமாவில் இத்தனை படங்களுக்கு இசை அமைத்த ஒரே நபர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர் நம்ப இசைஞானி தான்.
இவரது பின்னனி இசையினால் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இன்றும் இவரது இசைக்காக பல இயக்குநர்கள் வரிசையில் நிற்கின்றனர். அதுவும் இவரது இசைக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது. காதலில் தோற்றவர்களும் இசைஞானியின் இசைதான்...மீசை அரும்பும் வயதில் காதலில் விழுந்தவர்களும் இசைஞானியின் இசைதான்.
இவரது இசை இந்தியாவை மட்டுமல்ல...உலகத்தையே மயக்கி வைத்திருக்கிறது. இதுவரை இவரது பாடல்களை கேட்காதவர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தை முதல் இறக்க உள்ள பெருசு வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இசைக்கு சொந்தகாரர் நம்ப இசைஞானி. இன்று 72ஆவது பிறந்தநாளில் காலடி எடுத்து வைக்கும் மேஸ்ட்ரோ இசைஞானி இளையாராஜா அவர்களுக்கு ’தமிழ் உலகத்தின்’ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இந்த பிறந்த நாளை தனது இசையில் பாடல்கள் எழுதிய கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்களுடன் முதலில் கொண்டாட நினைத்தார் இளையராஜா. பின்னர் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு, தனது இஷ்ட தெய்வமான கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நேற்று மாலையே சென்றுவிட்டார். இரவு அம்மனை தனது குடும்பத்தினருடன் வழிபட்டார்.
இன்று கொல்லூரிலேயே தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இளையராஜா. நாளை சென்னை திரும்பும் அவர், நண்பர்கள், ரசிகர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்களின் வாழ்த்துகளைப் பெறுகிறார்.

No comments:

Post a Comment