இந்திய கிரிக்கெட் குழு வாரியமான BCCI-ன் ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
BCCI-ன் செயலாளர் அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘BCCI உருவாக்கியுள்ள புதிய ஆலோசனைக் குழுவில் இந்திய அணியின் சாதனையாளர்களான சச்சின், கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த டுவிட் மூலம் பல நாட்களாக பரவி வந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சச்சின் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் என்று கூறப்பட்டது. அதோடு, கங்குலி இந்திய அணியின் தலைமை பொறுப்பாளர் பதவிக்கு வருவார் என்றும் கூறப்பட்டு வந்தது.
மேலும், இந்தக் குழுவில் முதலில் டிராவிட்டை இணைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால், அவர் மறுத்ததன் காரணமாக லட்சுமணனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்.

No comments:
Post a Comment