Tuesday, 2 June 2015

ஜூலை 3 முதல் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த வரும் ’Terminator Genisys’



“ஐ வில் பி பேக்”, என்ற தனது பிரபலமான வசனத்துக்குரியவாறே மீண்டும் ரசிகர்களை ‘Terminator Genisys’ திரைப்படத்தின் மூலம் கொண்டாட்டத்தில் ஆழ்த்த வருகிறார் அர்னால்டு. ‘Terminator Genisys’ தமிழில் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ என்ற பெயரில் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது.
ஆக்ஷன், அதிரடி பொங்கும் கதையம்சம் கொண்ட டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியான‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ (‘Terminator Genisys’). எதிர்காலத்தில் நடக்கும் கதையாக தொடங்கி சாரா கானர்,ஜான் கானர், கையில் ரீஸ் மற்றும் டெர்மினேட்டர்கள் இடையே வெவ்வேறு கால அமைப்புகள் நடக்கும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.
தனது டெர்மினேட்டர் கதாப்பாத்திர பிரவேசத்தை பற்றி அர்னால்டு கூறுகையில், “எனது நினைவுக்கு தெரிந்த வரை 30 வருடங்களுக்கு மேல் ஒரு தொடரில் ஒரே நடிகர் நடிப்பது இது தான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கோனான் தி பார்பேரியன் போன்று நான் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களையும் மீண்டும் நடிக்க அழைக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது” என்கிறார்.
பிரம்மாண்ட படமான ‘தோர்: தி டார்க் வேர்ல்ட் அண்ட் கேம் ஆஃப் த்ரான்ஸ்’ படத்தின் இயக்குனர் ஆலன் டெய்லர் தான் ‘Terminator Genisys’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை இயக்கியதைப் பற்றி கூறும்பொழுது “ தோர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் ஈடுபடுவது சற்று அயர்ச்சியாகவே இருந்தது எனினும், ‘Terminator Genisys’ படத்தின் வெற்றியை கணித்து இருந்ததால் விட இயலவில்லை.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய முதல் இரண்டு பாகங்கள் ஆக்ஷன் பின்னணியாய் இருந்தாலும் மானிடராய் இருப்பதன் உன்னதத்தை உணர்த்துவதாய் அமைந்திருந்தது என்னை பெரிதும் ஈர்த்தது.” என்றார்.
Skydance Productions மற்றும் Paramount Pictures நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பாக வரும் ‘Terminator Genisys’ திரைப்படத்தை Viacom 18 Motion Pictures நிறுவனத்தார் இந்தியாவில் வெளியிடுகிறார்கள். ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் Imax 3D, 3D டிஜிட்டல் மற்றும் 2D என அனைத்து திரையிடல் தொழிநுட்பத்திலும் தயாராகும் ‘Terminator Genisys’ ஜூலை 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தமிழ் டிரைலர் கீழே…

No comments:

Post a Comment