Wednesday, 3 June 2015

பிரதமர் மோடி MP பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும்: காங்கிரஸ்!!


பிரதமர் மோடியை MP பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி செய்த செலவு தொடர்பாக சரியான மற்றும் உண்மையான அறிக்கையை தாக்கல் செய்ய மோடி தவறிவிட்டார். இது தேர்தல் விதிமுறைகளை மீறுவது ஆகும். எனவே பிரதமர் மோடியை எம்.பி. பதவில் இருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திஉள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜேஷ் மிஸ்ரா மற்றும் காங்கிரஸ் தலைவர் புராஜா நாத் சர்மா ஆகியோரது சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டபிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா இந்த புகாரை அளித்து உள்ளார்.


அதில், “மதிப்பீட்டின்படி வாரணாசி தொகுதியில் அவரது தேர்தல் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஹைடெக் சீரமைப்பு பணிக்கு ரூ. 2 கோடி செலவிடப்பட்டதாகவும், இந்த செலவு பிரதமர் மோடியின் தேர்தல் செலவு கணக்கில் காட்டப்பட வேண்டும்.
மேலும், வாரணாசி தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் செய்யப்பட்ட செலவும் கணக்கில் காட்டப்படவேண்டும். பிரதமர் மோடி போக்குவரத்து செலவையும் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
இதுதொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம், அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய தேவைப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.” என்று காங்கிரஸ் தரப்பின் புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



No comments:

Post a Comment