வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் "மாசு என்கிற மாசிலாமணி”.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் ஈழத்தமிழனை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும், அதனால் தான் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை எனவும் பாடலாசியர் சினேகன் கூறியுள்ளார்.
சமீபத்தில் சாந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சினேகன், ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்துக்கு வரிவிலக்கு கிடையாது. பட உரிமையை சன் டிவிக்கு கொடுத்ததால் தான் மறுக்கப்பட்டது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது கிடையாது. மாஸ் என்பது தமிழ்ப் பெயர் இல்லை என்பதாலும் இல்லை. உண்மை என்ன தெரியுமா?
நேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரியின் குறிப்பேட்டைப் பார்த்தேன். திருப்தியாக இருந்தது. மாசு படத்தின் ஒரு இடத்தில், நீ ஈழத் தமிழ் பேசுகிறவனா, உன்னை உதைக்கணும் என்று வசனம் வருகிறது. அதைக் கோடிட்டு ஒரு தமிழ் துறையைச் சார்ந்த அதிகாரி எழுதியிருக்கிறார், ஈழத் தமிழையும் ஈழத் தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடையாது என்று. இப்படியும் ஒரு சில அதிகாரிகள் இருக்கதான் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.
ஆனால் இது குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தை பார்த்த ஈழத்தமிழர்கள் யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வெளிநாடுகளில் முதல்நாள் முதல் காட்சியில் நிறைய ஈழத்தமிழர்கள் தான் படத்தை பார்த்தனர். எங்கும் பிரச்சினை ஏற்பட வில்லை. லண்டனில் குடியேறியுள்ள ஈழத்தமிழர்கள் இந்த படத்தில் ஈழத்தமிழ் பேசும் வசனங்களுக்கு உதவி செய்தனர்” என்று டுவிட்டரில் கூறி உள்ளார்.

No comments:
Post a Comment