டப்ஸ்மாஷ் என்ற மொபைல் ஆப் தான் தற்போது பட்டையைக் கிளப்பி வருகிறது. இதில், பல்வேறு பிரபலமான பட வசனங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த ஆடியோவை ஓடவிட்டு, படத்தில் நடிகர் காட்டிய ரியாக்ஷனை நடித்துக் காட்டி அதை வீடியோவாக பதிவு செய்வது தான் டப்ஸ்மாஷ்.
வயது வித்தியாசமில்லாமல் பலரும் இந்த டப்ஸ்மாஷ்உதவியுடன் தங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களை தட்டி எழுப்பி தடாலடியாக வெளியே விட்டு வருகின்றனர்.
இப்படி மக்களிடம் வேகமாக வளர்ந்து வரும் டப்ஸ்மாஷ் தற்போது திரையுலகினரிடமும் புகுந்துள்ளது. விஷால், ராதிகா, சூரி, ஆதி, அதர்வா, ஸ்ருதிஹாசன், கயல் ஆனந்தி, நிஷா அகர்வால் என்று பலரும் டப்ஸ்மாஷில் தங்களுக்கு பிடித்த வசனத்தை பேசி வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை த்ரிஷா. இவரிடைய டப்ஸ்மாஷ் வீடியோ தான் தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. த்ரிஷாவின் டப்ஸ்மாஷ் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment