Monday, 1 June 2015

சென்னை அமிர்தா விளம்பர விஷயத்தில் பல்டி அடித்த ராதிகா!!


நடிகை ராதிகா சரத்குமார், சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை என்றாலும் கூட, தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் பிரபல ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனமான அமிர்தா நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்தார். அதில் இவர் அந்த நிறுவனத்தை ஆஹா, ஓஹோ என புகழ்வது போன்று காட்சிகள் அமைந்திருக்கும்.


இந்நிலையில், அந்த நிறுவன அமைப்பின் புகைபடங்கள் இணையத்தில் வளம் வர ஆரம்பித்தது. இவற்றை பார்த்து ராதிகாவின் பெயரை டேமேஜ் செய்ய ஆரம்பித்துவிட்டனர், ஒரு சிலர். மேலும், ராதிகாவின் நிறுவனம் தான் அது என்றும் ஒரு சிலர் கொளுத்தி போட்டுவிட்டனர்.
இவற்றையெல்லாம் பார்த்த ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில், ’எனக்கும் அந்த நிறுவனத்திற்கும் தொழில் ரீதியான தொடர்பு தானே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை.


ஒரு நிறுவனத்தில் குழந்தைகளை சேர்க்கும் போது பெற்றோர்கள் தான் அதனை பற்றி தெரிந்து கொண்டு சேர்க்க வேண்டும். இனி நான் அமிர்தா தொடர்பான விளம்பரங்களில் நடிக்கப்போவதில்லை.’ என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment