Monday, 1 June 2015

தல 56 படம் பற்றி வெளியே தெரியாத சுவாரஸ்ய தகவல்கள்..?


அஜித் தற்போது ‘வீரம்’ சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. அஜித்தின் 56-வது படமான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க அவருக்கு தங்கையாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்திற்கு முன்பு சென்னையில்தொடங்கியது.
முதற்கட்டமாக அஜித்-லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் இப்படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் அஜித் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்றும், இல்லை இல்லை ஸ்ருதிஹாசன் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், இப்படத்தில் அஜித் இரண்டு விதமான கேரக்டரில் வருகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதில் அஜித் டாக்ஸி டிரைவராக நடிக்கும் போது சால்ட்&பெப்பர் லுக்கில் வருவராம். கொல்கத்தா சம்மந்தப்பட்ட காட்சியில் யங் லுக்கில் கலக்கவிருக்கிறாராம்.
மேலும், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனனை தவிர்த்து படத்தில் மற்றொரு ஹீரோயினும் இருக்கிறாராம். அவர் யார் என்பதை படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்களாம். இப்படம் 20% செண்டிமெண்ட், 40% காமெடி, 40% ஆக்‌ஷன் என கமர்ஷியல் விருந்தாக வெளிவரும் என கூறப்படுகின்றது. மேலும் படத்தில் ஒரு சேஸிங் காட்சி வேற உள்ளதாம்.

No comments:

Post a Comment