தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இப்போது இருக்கும் ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினும் இவர்தான்.
ரசிகர்கர்களுக்கு மட்டுமில்லாமல், இளம் ஹீரோக்களுக்கும் கனவுக் கன்னியாகவும், கவர்ச்சிப் புயலாகவும் வலம்வரும் இவருடைய உண்மையான பெயர் 'டயனா மரியா குரியன்'.
2003ஆம் ஆண்டு 'மனசினகாரே' என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். ஆனால் அப்போது இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்கவில்லை.
சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடியாக நடித்தும் சூர்யா உடன் கஜினியில் இரண்டாவது நாயகியாகவே நடித்தார். சிவகாசி படத்தில் திடீரென்று ஒரு குத்துப்பாடலுக்கு ஆடினார். அவ்வளவுதானா நயன்தாராஎன்றிருந்தவர்களுக்கு வல்லவன் மூலம் சிம்புவின் ஜோடியாக நடிப்பு வாய்ப்பு வந்தது. அப்போதுதான் சிம்பு உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதோடு சிம்புவுடன் முத்தம் மற்றும் அந்தரங்க புகைப்படம் வெளியாகவே அத்துடன் தனது காதல் முறிவு என்று அறிவித்தார்.
அதற்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அந்த படத்தை இயக்கிய பிரபுதேவா உடன் காதல் வயப்பட்டார். அந்த காதல் திருமணம் வரை போனது. இதனால் இனிமேல் படத்தில் நடிக்கமாட்டேன் என்று அறிவித்தார் நயன்தாரா. கடைசியில் அந்த காதலும் முறிந்து முடிவுக்கு வந்தது. காதல் கிசுகிசுக்கள், காதல் முறிவுகள் என நயன்தாரா பற்றிய செய்திகள் எப்பவுமே ஊடகங்களுக்கு தீனி போட்டுக்கொண்டு இருந்தது.
இந்நிலையில்தான் காதல் தோல்விகளில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த நயன்தாராவுக்கு வாய்ப்புகள் மழையாக கொட்டியது. ஆரம்பம், ராஜா ராணி, என அடுத்தடுத்த ஹிட் கொடுத்தார். மாஸ் ஹீரோ என்று இல்லாமல் யாருடன் வேண்டுமானாலும் நடிக்க தயார். ஆனால் கதை எனக்கு பிடித்து இருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.
காதல் தோல்விக்குப் பிறகுதான், நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இளம் நடிகர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளதாம். இதைப் பயன்படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்டும் நயன்தாரா, இனி ஆக்ஷன் கதைகளுக்குத்தான் முன்னுரிமை என்கிறார்.
தற்போது இவருடைய சம்பளம் 3 கோடியை தொட்டாலும், வரிசையில் நிற்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.நயன்தாரா சினிமா உலகிற்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டது. எத்தனையோ கதாநாயகிகள் வந்து போயுள்ளனர். நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகிவருகின்றனர். ஆனாலும் தற்போதைய நிலவரப்படி இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை நயன்தாராதான் நம்பர் 1 நீடிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

No comments:
Post a Comment