Friday, 24 April 2015

சிம்புவிடம் சிக்கிக்கொண்ட லட்சுமி மேனன்..!


கோலிவுட்டின் லட்சுமிகரமான நடிகையாக வலம் வருப்பவர் நடிகை லட்சுமி மேனன். தோல்வியே சந்திக்காத ஒரே நடிகை இவர் தான். இவர் நடித்த அனைத்து படங்களும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு காரணம் நடிப்பு மட்டுமல்லாமல், வித்தியாசமான கதையை தேர்ந்தெடுக்கும் விதமும் தான்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கொம்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு எந்தப் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அஜித்துக்கு தங்கச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டு எல்லோருக்கும் ஆச்சரியமளித்துள்ளார் லட்சுமே மேனன். எந்த முன்னணி நாயகியும் அஜித்துக்கு தங்கச்சியாக நடிக்க முன்வராத நிலையில் இவர் வந்துள்ளார்.
இதனையடுத்து ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தைய இயக்கிய சக்திராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கவிருக்கிறார் லட்சுமி மேனன். இன்னும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்போடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு புதிய படமொன்றிலும் லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள் ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்கிக்கொள்வார்கள். அந்த வகையில் லட்சுமிமேனன் எந்த கிசுகிசுவில் சிக்கப்போகிறாரோ..?

No comments:

Post a Comment