Friday, 24 April 2015

ஐ.பி.எல் 8: ராஜஸ்தானை ஈஸியாக வென்ற பெங்களூர் அணி…!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய 22வது ஆட்டத்தில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 9விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டி அகமதாபாத் சர்தார் பட்டேல் என்ற மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும் மோதினர். இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது அதன்படி அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய ரஹானேவும், ஷேன் வாட்சனும் ஆடினர்.
இதில் ரஹானே (18) ரன்களையும், ஷேன் வாட்சன் (26) ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் (31) ரன்களையும், கருண் நாயர் (16) ரன்களையும், ஸ்டுவர்ட் பின்னி (20) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர் ஏனையவீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆட்டநேர முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 130 ரன்களை மட்டும் எடுத்தது.
பெங்களூர் அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3விக்கட்டுக்களையும், ஹார்ஷல் படேல், யுஷ்வேந்திரா ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதேவேளை 131 என்ற இலகுவான ரன் இலக்குடன் ஆடிய பெங்களூர் அணி 1விக்கட்டை இழந்து 134 ரன்களை எடுத்து 9விக்கட்டுக்களால் அமோக வெற்றியை பெற்றது. அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய கெய்லும் கோஹ்லியும் மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர்.
இதில் கெய்ல் (20)ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். பெங்களூர் அணியின் இன்னுமொரு ஆரம்ப ஆட்டக்காரரான அந்த அணியின் அணித்தலைவர் கோஹ்லி அரைச்சதம் தாண்டி (62) ரன்களையும், ஏ.பிடிவில்லியர்ஸ் (47) ரன்களையும் அடித்த இவர்கள் மிகச் சிறப்பாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷேன் வாட்சன் 1விக்கட்டை மட்டும் கைப்பற்றினர். நேற்றைய ஆட்டத்தில் பந்துவீச்சில் பிரகாசித்த மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment