Tuesday 28 April 2015

ஐ.பி.எல் 8: பரப்பரப்பான ஆட்டம் 2 ரன்களில் வெற்றி பெற்ற சென்னை அணி…!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்ற நடைபெற்ற 28வது ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியை 2 ரன்களால் அமோக வெற்றியை பெற்றது. நேற்றைய ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய சென்னை அணி முதலில் ஆடிய அந்த அணி 20 ஒவர்களில் 6விக்கட்டை இழந்து 134 ரன்களை எடுத்தது. சென்னை அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான டுவைன் ஸ்மித்தும் பிரண்டன் மெக்குல்லமும் சேர்ந்து மிக நிதானமான ஆரம்பத்தை கொடுத்தனர் டுவைன் ஸ்மித் (29) ரன்களையும், மெக்குல்லம் (19) ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா (17) ரன்களையும், அணித்தலைவரான தோனி (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய பிரோவோ (5) ரன்களை எடுத்திருந்தபோது பியூஸ் சாவ்லாவின் அருமையான பந்தில் ஆட்டமிழந்தார் இதேவேளை இன்னுமொரு ஆட்டக்காரரான ஜடேஜா (15) ரன்களில் ஹாக்கின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதிநேரத்தில் களமிறங்கிய டுபிளசி (29) ரன்களையும், அஷ்வின் (9) ரன்களை அடித்து அந்த அணிக்கு ரன்களை உயர்த்த சென்னை அணி 20 ஒவர்களில் 6விக்கட்டை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் சாவ்லா, ரசல் ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 135 என்ற எளிய இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணியின் ஆரம்பத் ஆட்டக்காரரான களமிறங்கிய அணித்தலைவர் கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் ஆடினர்.
இதில் கம்பீர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததை தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான உத்தப்பாவும் ஜோடி சேர்ந்து மிக விரைவாக ரன்களை எடுக்க சென்னை அணிக்கு சற்று பேரிடியாக அமைந்த வேளையில் அஷ்வின் களமிறக்கப்பட்டார் அவர் தன்னுடைய மாயமான சுழற்பந்துவீச்சில் உத்தப்பாவை (39) ரன்களையும், பாண்டேயை (15) ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
அடுத்து களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் (16) ரன்களில் ஆட்டமிழக்க அந்த வேளையில் கொல்கத்தா அணி 12.2 ஒவர்களில் 4விக்கட்டை இழந்து 76 ரன்களை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அதன்பின் களமிறங்கிய யூசுப் பதான் (13) ரன்களில் பிராவோவின் பந்து வீச்சில் விக்கட்டை இழந்தார். அடுத்ததாக ரசல் (4) ரன்களில் ரன் ஒன்று எடுக்கு முறையில் ஆட்டமிழந்தார். இறுதி ஒவரில் அந்த அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிராவோ பந்து வீசினார் முதல் மூன்று பந்துகளில் ரன்கள் எடுக்க வில்லை அவருடைய 4வது பந்தில் டென் டஸ்காட்டே அருமையான சிக்ஸர் ஒன்றை அடித்தார்.
அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரி அடித்த போதும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்களால் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் பந்து வீச்சில் பிராவோ 3விக்கட்டுக்களையும், அஷ்வின் 2விக்கட்டுக்களையும், ஐசி பாண்டே, நெய்ரா, மொஹித் சர்மா ஆகியோர் தலா 1விக்கட்டுக்களை கைப்பற்றினர். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக பந்து வீச்சில் பிரகாசித்து முக்கிய 3விக்கட்டுக்களை கைப்பற்றிய பிராவோ தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment