Thursday 30 April 2015

இன்றைய தினம்…!!( மே 1)


மே 1
தொழிலாளர் தினம்!!!
மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.
ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள்.
ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும். காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் International Working Men's Association அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.
ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.
ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday" என்று மாற்றிற்று.
ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1834 - பிரித்தானியா அடிமைத் தொழிலை நிறுத்தியது.
1930 - புளூட்டோவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1931 - நியூயோர்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
2011 - அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லாடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறப்பு தினம்:
தொழிலாளர் தினம்.
இத்தாலி தேசிய நாள்.
செக் குடியரசு காதலர் தினம்.

No comments:

Post a Comment