Monday 27 April 2015

உலகை உலுக்கிய நிலநடுக்கங்கள்…!


உலகில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்ட சில நிலநடுக்கங்களின் பட்டியல்:
2012, ஆகஸ்ட் 11: ஈரானின் தாப்ரிஸ் நகரில் ஏற்பட்ட இரட்டைநிலநடுக்கங்க ளில் 306 பேர் உயிரிழந்தனர். ரிச்டர் அளவு கோல் பதிவு: முறையே 6.3, 6.4 புள்ளிகள்.
2011, மார்ச் 11: ஜப்பானில் வடகிழக்கு கடலோரப்பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி தாக்கி சுமார் 18,900 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணு உலைகளில் விபத்து ஏற்பட்டது. ரிச்டர் பதிவு: 9.0 புள்ளிகள்.
2010, ஜனவரி 12: ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2.50 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை இறந்தனர். ரிச்டர் பதிவு: 7.0 புள்ளிகள்.
2008, மே 12: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 8.0 புள்ளிகள்.
2006, மே 27: இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6000 பேர் உயிரிழந்தனர். 15 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
2005, அக்டோபர் 8: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 7.5 புள்ளிகள்.
2005, மார்ச் 28: இந்தோனேசியாவின் நியாஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 900 பேர் இறந்தனர்.
2004, டிசம்பர் 26: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி காரணமாக இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் 2.20 லட்சம் பேர் உயிரிழந்தனர். ரிச்டர் பதிவு: 9 புள்ளிகள்
2003, டிசம்பர் 26: ஈரானின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 31,884 பேர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 6.7 புள்ளிகள்.
2001, ஜனவரி 26: குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25,000 பேர் இறந்தனர். 1.6 லட்சம் பேர் காயமடைந்தனர். ரிச்டர் பதிவு: 7.7 புள்ளிகள்.
1993, செப்டம்பர் 30: மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7,601 பேர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 6.3 புள்ளிகள்.
1991, அக்டோபர் 20: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 768 பேர் உயிரிழந்தனர்.
1988, ஆகஸ்ட் 20: நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 721 பேர் இறந்தனர். பீகார் மாநிலத்தில் 277 பேர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 6.8 புள்ளிகள்.
1976, ஜூலை 28: சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2.42 லட்சம் பேர் இறந்தனர். ரிச்டர் பதிவு: 7.8 புள்ளிகள்.
1934, ஜனவரி 15: நேபாளத் திலும், பீகாரிலும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 10,700 பேர் உயிரிழந்தனர். ரிச்டர் பதிவு: 8.1 புள்ளிகள்.

No comments:

Post a Comment