Wednesday 29 April 2015

தின பலன் 29-04-2015


தெரிந்து கொள்வோம்: கோவில்களில் மணிகள் அடிக்கப்பது ஏன்…??
கோவிலில் மணிகள் அடிக்கப்படுவதற்கு காரணமாக நம் முன்னோர்கள் கூறியது, தெய்வத்தை வழிபடும் போது, வின்னுலகில் இருக்கும் தேவர்களுக்கு தெய்வத்தை வணங்குவதை உணர்த்துவதற்காக என்பது தான்.
ஆனால், இந்த மணிகள் ஒலிக்கப்படுவதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணமும் உள்ளது. கோவிலுக்குச் செல்வது மன அமைதியைத் தரும் என்று பலரும் நம்புகின்றனர். இந்த மன அமைதியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த மணியோசை தான்.
பண்டைய கோவில்களில் உள்ள மணிகள் கேட்மியம் (தகர உலோக வகை), ஜிங்க், ஈயம், தாமிரம், நிக்கல், குரோமியம் மற்றும் மாங்கனீசு போன்ற உலோகங்களின் கலவையால் தனித்துவமான சப்தத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை. அதனால் மணியை ஒலிக்க தொடங்கிய அடுத்த நொடியிலேயே கூர்மையான மற்றும் நீண்ட நேரம் நீடிக்க கூடிய சத்தம் எழும்.
7 நொடிகள் வரை மெல்லியதாக நீடிக்கக் கூடிய இந்த மணியோசையை நாம் கேட்கும் போது, மெய்மறந்த நிலை ஏற்படும். அதாவது மூளை வெற்றாக மாறி, நினைவிழந்த நிலையை அடையும். இவ்வாறு, நினைவிழந்த நிலையை நாம் அடையும் போது, நமது மூளையின் வாங்குந்தன்மையும், உணர்வு திறனும் அதிகமாகும்.
இது தியானத்திற்கு ஒப்பான பலனை மூளைக்கு அளிக்கிறது. இதனால், மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இது தவிற, கோவில்களில் ஏற்படும் அமைதி இடையூறுகளை ஈடுகட்டவும் மணிகள் உதவுகின்றன. கோவில்கள் பெரும்பாலும், அமைதியாக இருக்கும். இவ்வாறான அமைதியான சூழலில் தான் நாம் கடவுளை ஒரு மனதாக வணங்குகிறோம்.
அதே சமயம், மக்கள் கூடும் இடங்களான இவற்றில், குழந்தைகள் அழுகை, தும்மல், இருமல் போன்ற தவிற்க முடியாத சில நிகழ்வுகளால் அமைதி குலைக்கப்படலாம். இவ்வாறான சமயத்தில் நாம் மணியோசையை கேட்பதால், மெய்மறந்து, அருகில் நடக்கும் அமைதி இடையூறுகளை மறக்கிறோம்.
இன்று இந்த ஒற்றை மணி முறை முற்றிலுமாக மருவி, கையில் ஒரு மணியும், வெளியில் எலக்ட்ரானிக் மணி மேள இயந்திரமும் ஆகிவிட்டன. இதனால், மன அமைதியை ஏற்படுத்துவதற்காக ஒலிக்கப்பட்ட மணிகளாலேயே, அமைதி சீர்குலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - யோகம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - மேன்மை
கடகம் - சோதனை
சிம்மம் - சிரமம்
கன்னி - நிம்மதி
துலாம் - அமைதி
விருச்சிகம் - கவனம்
தனுசு - பாசம்
மகரம் - பக்தி
கும்பம் - வெற்றி
மீனம் - நன்மை

No comments:

Post a Comment