Monday 27 April 2015

தின பலன் 28-04-2015


தெரிந்து கொள்வோம்: சிவ லிங்கம் எதை உணர்த்துகிறது?
இந்துக்களின் கடவுளர்களில் முக்கியமானவர் சிவன். சிவனை லிங்க வடிவில் வைத்து தான் நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இந்து மதம் தோன்றுவதற்கு முன்பே, சிந்து சம வெளி நாகரிகத்திலேயே லிங்க வடிவை மக்கள் வழிபட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.
இந்த லிங்க வடிவம் எப்படி வந்தது, இதற்கு என்ன பொருள் என்பது இன்றளவும் சர்ச்சைக்குறிய ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த சிவ லிங்கம் எதை உணர்த்துகிறது என்பது குறித்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
மும்மூர்த்திகளின் வடிவம்
சிவலிங்கத்தின் மேற்பகுதி அதாவது நாம் பார்க்கும், பீடம் போன்ற பகுதிக்கு மேல் இருக்கும் உருளை வடிவான பகுதி சிவனையும், பீடத்திற்கு இடைப்பட்ட பகுதி காக்கும் கடவுளான விஷ்னுவையும், பீடத்தை தாண்டி பூமியில் புதைந்திருக்கும் பகுதி படைக்கும் கடவுள் பிரம்மாவையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.
குறி
லிங்கம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சொல்லுக்கு குறி என்ற பொருளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படி, சிவ லிங்கம் என்பது சிவனின் குறி. சிவனைக் குறிக்கும் பொருள். இது அல்லாது, சிவ லிங்கம் ஆண் குறியைக் குறிக்கும் என்ற ஒரு சர்ச்சையான கருத்தும் நிலவி வருகிறது. உயிர்களின் பிறப்பை உணர்த்தும் விதமாக, ஆண்குறி வடிவில் லிங்கத்தை முன்னோர்கள் அமைத்ததாகவும் கூறப்படுகிறது.
உருவமற்றவர்
இறைவன் உருவமற்றவன் என்பதை குறிக்கும் விதமாக சிவலிங்கம் கோள வடிவில் அமைந்திருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதாவது, அண்டத்தில் ஒரு பொருள் எந்த ஒரு நிலையும் அல்லாத போது கோள வடிவத்தை பெறும். உதாரணத்திற்கு தன்னீர். தன்னீரை, பாத்திரத்தில் ஊற்றி வைத்தால் பாத்திரத்தின் உருவத்தை பெறும்.
அதே தன்னீர், வானில் இருந்து பொழியும் மழையாகப் பொழியும் போது, கோள வடிவைப் பெறும். அது போல், உருவமற்ற சிவனை கோள வடிவில் வைத்து மக்கள் வழிபட்டிருக்கலாம்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - நன்மை
ரிஷபம் - பக்தி
மிதுனம் - வெற்றி
கடகம் - சுகம்
சிம்மம் - பயம்
கன்னி - பாரட்டு
துலாம் - குழப்பம்
விருச்சிகம் - பிரமை
தனுசு - அமைதி
மகரம் - விவேகம்
கும்பம் - அன்பு
மீனம் - சிரமம்

No comments:

Post a Comment