Thursday 30 April 2015

ஐ.பி.எல் 8: சென்னையை வீழ்த்தி நான்காவது வெற்றியை ருசித்த கொல்கத்தா!!!


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 30வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி சென்னை அணியை 7 விக்கட்டுக்களால் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியானது நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. நேற்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய டுவைன் ஸ்மித்தும் மெக்குல்லமும் ஆடினர். இதில் டுவைன் ஸ்மித் (0) ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா (8) ரன்களையும், இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான மெக்குல்லம் (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கமிறங்கிய டுபிளசிஸ் (20) ரன்களையும், அடுத்து களமிறங்கிய டுவைன் பிராவோ (30) ரன்களையும் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். அடுத்ததாக களமிறங்கிய தோனி (1) ரன்களையும், அதன்பின்னர் களமிறங்கிய ஜடேஜா (24) ரன்களையும். அடுத்து களமிறங்கிய பவன் நேகி (27) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆட்டநேர முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஒவர்களில் 9விக்கட்டை இழந்து 165 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சு சார்பில் பிராட் ஹோக் 4விக்கட்டுக்களையும், ஆண்ட்ரு ரசல் 2விக்கட்டுக்களையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 166 என்ற ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஒவர்களில் 3விக்கட்டை இழந்து 166 ரன்களை எடுத்து 7விக்கட்டுக்களால் அபார வெற்றியை பெற்றது.
அந்த அணியின் ஆரம்ப ஆட்டக்காரரான களமிறங்கிய கம்பீரும், உத்தப்பாவும் மிகச் சிறப்பான ஆரம்பத்தை கொடுத்தனர் இதில் கம்பீர் (19) ரன்களையும், அடுத்து களமிறங்கிய மனீஷ் பாண்டே (3) ரன்களையும் அடுத்ததாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (2) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதேவேளை அந்த அணியின் இன்னும்மொரு ஆரம்பத் ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா அரைச்சதம் தாண்டி ஆட்டமிழக்காமல் (80) ரன்களையும் மற்றுமொரு நடுவரிசை ஆட்டக்காரரான ஆண்ட்ரி ரசல ஆட்டமிழக்காமல் (55) ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக ஆட்டத்திலும் பந்துவீச்சிலும் பிரகாசித்த ஆண்ட்ரி ரசல் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணியின் பந்துவீச்சில் சார்பில் மொகித் சர்மா, பவன் நேகி, றோனிற் கஜன் மோ ஆகியோர் தலா 1விக்கட்டை கைப்பற்றினர்

No comments:

Post a Comment