Tuesday 28 April 2015

இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு இன்று மரண தண்டனை..!


போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இன்று இன்னும் சில மணி நேரங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இது பற்றிய உத்தியோகபூர்வமான அறிவித்தல் கடந்த சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா சட்டத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 72 மணி நேரங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அந்தவகையில் இந்தோனேஷிய அதிபர் இன்று இறுதிநேரத்தில் இவர்களுக்கு கருணை காட்டாதவிடத்து இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர், ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இன்னும் உலகளாவிய ரீதியில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும், இந்தோனேசிய அரசாங்கம் இந்த வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கவில்லை. இதேவேளை இறப்பதற்கு சில மணி நேரம் முன் இன்று குற்றவாளிகளில் ஒருவரான அன்றூ சான் தனது காதலியை சிறைச்சாலையில் வைத்து திருமணம் முடித்திருந்தார் இறக்கும்முன் இவ்விருவரையும் பார்வையிட குடும்பத்தினர் இன்று சிறைச்சாலைக்கு பயணம் செய்திருந்தனர்.
மயூரன் சுகுமாரன் இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment