Tuesday 28 April 2015

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Audi TT-ன் விலை ரூ. 60.35லட்சங்கள்!!!


பிரபல ஜெர்மன் கார்தயாரிப்பு நிறுவனமான Audi தனது கூஃபே மாடலான Audi TT-ன் மூன்றாம் தலைமுறை காரை இந்தியாவில் சென்ற வாரம் அறிமுகப்படுத்தியது.
இதன் இந்திய விலை ரூ. 60.35 லட்சங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையானது, டெல்லி மற்றும் மும்பையின் எக்ஸ் ஷோரும் விலையாகும். மேலும், இந்த மாடல் மெர்சிடீஸின் SLK, BMW—ன் Z4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளது Audi.
முந்தைய Audi TT மாடலைவிட நீளமும், அகலமும் கூடியிருக்கிறது. பின்புற டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய கார் முந்தைய மாடலைவிட 50 கிலோ எடை குறைவானது.
Audi TT 4,180மிமீ நீளமும், 1,832மிமீ அகலமும், 1,353மிமீ உயரமும் கொண்டுள்ளது. இந்த காரின் பூட்ரூம் 305 லிட்டர் கொள்ளளவை பெற்றிருக்கிறது.
Audi நிறுவனத்தின் Matrix LED விளக்குகளுடன் வந்திருக்கும் அடுத்த Audi மாடல் இது தான். ஏற்கனவே, Audi A8 மாடலில் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய மாடலில் இருந்த அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 227bhp பவரையும், 370nm டார்க்கையும் வழங்கும். இந்த காரில் 6 speed DSG டுயல் க்ளட்ச் கியர்பாக்ஸ் உள்ளது.
Audi-ன் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை தொடுவதற்கு 5.6 வினாடிகளை எடுத்துக் கொள்ளும். மணிக்கு 243 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. லிட்டருக்கு 14.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ கீழே!!!

No comments:

Post a Comment