Sunday 26 April 2015

ஜெ., வழக்கு: பவானி சிங் வாதம் செல்லாது, உச்ச நீதிமன்றம் உத்தரவு!!


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீடு கர்நாடக நீதிமன்றத்தின் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வந்தது.
இவ்வழக்கிலும் அரசு தரப்பில், சொத்து குவிப்பு வழக்கில் வாதாடிய அரசு வழக்கறிஞர் ‘பவானி சிங்’ வாதடினார். இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை நெருங்கிய நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங், குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தி.மு.க., பொதுச் செயலாளர் க. அன்பழகன் இவ்வழக்கில் பவானிசிங் ஜெயலலிதா தரப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வழக்கின் போக்கை மாற்றுவதாகவும் கோரி, அவரை அரசு தரப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கால், ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தடை பட்டுப் போனது.
மேல்முறையீட்டு வழக்கில் இரு தரப்பு வாதங்களும், முடிந்தது. தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. இந்தியாவிலேயே 2 வது அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான அ.தி.மு.க.,வின் மூளையாக செயல்பட்டவர் ஜெயலலிதா. அவர் மீதான இந்த மேல்முறையீடு அரவருக்கு எதிராக அமைந்தால், 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா அரசியல் பக்கம் திரும்பிக் கூட பார்க்க முடியாது.
எனவே, இந்த வழக்கின் தீர்ப்பு இந்திய அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அன்பழகனின் மனு மீதான விசாரணையில் சொத்து குவிப்பி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தடை பட்டது. இந்த அன்பழகன் மனு மீதான தீர்ப்பு அன்பழகனுக்கு சாதகமாக முடிந்தால், ஜெ., மேல்முறையீட்டு வாக்கு இன்னமும் நீள வாய்ப்பு உள்ளது.
கடந்த 15ம் தேதி, அன்பாகனின் மனு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அதில், பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை என்று பானுமதியும், பவானி சிங் நியமனம் தவறு என்று லோக்கூரும் இரு வேறான தீர்ப்பினை தெரிவித்தனர். இதனால் இவ்வழக்கு இன்றைய தேதி, ஏப்ரல் 27க்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து தான் ஜெயலலிதா மேல்முறையீட்டு தீர்ப்பு அமையும் என்பதால், இம்மனு மீதான விசாரணை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் முக்கியதுவம் பெற்றுள்ளது. இதன் படி இன்று தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பு பின்வருமாறு:
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது தவறு. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. கர்நாடக அரசுக்குத்தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க அதிகாரம் உள்ளது. வழக்கு விசாரணை முடிவடைந்து உள்ளதால், மறு விசாரணை தேவையில்லை. க.அன்பழகன் தரப்புக்கு எழுத்து மூலமாக வாதத்தை தாக்கல் செய்யவும், கர்நாடக அரசும் தனது வாதத்தை எழுத்து மூலமாக தாக்கல் செய்யலாம்.

No comments:

Post a Comment