Monday 27 April 2015

பிரிட்டன் தேர்தல்: போட்டி போட்டு வாக்குறுதி அளிக்கும் தலைவர்கள்!!


பிரிட்டனில் வரும் மே 7ம் தேதி பொதுத்தேர்தல், நடக்க இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் படு ஜோராக நடந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்து வாழ்மக்களுக்கு அங்குள்ள இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.
பிரிட்டனில் ஆட்சியில் இருக்கும், கன்சர்வேடிவ்ஸ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன், தங்கள் குட்டணி ஆட்சிக்கு வந்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்துவதை முற்றிலுமாக நீக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், கன்சர்வேடிவ் கட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டத்தில் ஊதியம், வெல்ஃபேர், வீட்டு வசதி மற்றும் குழந்தைகள் நலப்பராமரிப்பு ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படம் எனவும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், எதிர்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபண்டும், அதிகரித்துக் கொண்டே செல்லும் வாடகையை கட்டுக்குள் கொண்டுவருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். பணவீக்கத்திற்கு ஏற்றவாறு, தனியார் நில உரிமையாளர்கள் வாடகை ஏற்றுவதை 3 ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்கும் திட்டத்தை தான் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் மிலிபண்ட்.
தொழிலாளர்கட்சியின் இந்த வாடகைக் கொள்கை ஒரு பேரழிவுக் கொள்கை என்று விமர்சித்துள்ளார் கன்சர்வேட்டிவ் லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்ஸன். இந்நிலையில், மேமாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை வெற்றி பெற வாய்பில்லை என்று இணையம் சார்ந்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலத்தை மக்களுக்கு காட்டி ஓட்டு பெறுவதில் முழு மூச்சோடு செயல்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment