Tuesday 28 April 2015

’மோடி சொல்லி தான், நிலநடுக்கம்னு தெரியும்’: நேபாள பிரதமர்!!?


நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதே மோடியின் டுவிட்டை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 4000த்துக்கு அதிகமானோர் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையாத இவ்வேளையில் இறந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே கூறுகையில், ‘நிலநடுக்கம் ஏற்பட்ட போது பிரதமர் சுஷில் கொய்ராலா சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள இந்தோனேஷியா சென்றிருந்தார்.
இந்திய பிரதமர் மோடி அவர்களின் டுவிட்டை பார்த்தே இது பற்றி நாங்கள் தெரிந்து கொண்டோம். அதன் பிறகே முழுவிவரத்தையும் அறிந்து கொண்டோம். மோடி செய்து வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்க எங்களிடம் வார்த்தையே இல்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment