Friday, 24 April 2015

ஓடினால் கன்னித்தன்மை போயிடுமாம், இஸ்லாமிய பள்ளி முதல்வர் சொல்றார்!!


ஆஸ்திரேலியாவில் தான் இந்த விச்சித்திரமான நம்பிக்கைகள் உள்ளன. அதுவும், ஒரு இஸ்லாமியப் பள்ளியில். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமந்துள்ளது, அல் தக்வா என்ற இஸ்லாமியப் பள்ளி.
இப்பள்ளியின் முதல்வர் உமர் ஹல்லாக். இவர் அங்கு பயின்று வரும் மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயங்கள் மற்றும் கால்பந்தாட்டங்களில் மாணவிகள் பங்கேற்கக் கூடாது என்று சிறப்பு கண்டிஷன்களை வைத்துள்ளார்.
ஏன் பங்கேற்கக் கூடாது என்பதற்கு அவர் அளித்துள்ள காரணம் தான் உலகையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டது. பள்ளியின் முதல்வர் அல் தக்வாவின் கருத்துப் படி, மாணவிகள் ஓட்டப் பந்தையத்தில் ஓடினால் அவர்களது கன்னித் தன்மை பாதிக்கப்படுமாம். அதே போல் பெண்கள் கால்பந்தாட்டத்தில் பங்கேற்று கால் உடைந்தால் அவர்களுக்கு குழந்தையே பிறக்காதாம்.
உமரின் இந்த ஸ்ட்ரிக்டான கண்டிஷனால், கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையேயான ஓட்டப்பந்தயத்தில் இப்பள்ளி மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளவில்லையாம். பயிற்சி பெற்று வந்த மாணவிகளும் அனுமதிக்கப்பட வில்லையாம்.
இந்நிலையில், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் உமரின் இந்த விசித்திரமான கண்டிஷன்கள் குறித்து விக்டோரியா மாநில கல்வி அமைச்சர் ஜேம்ஸ் மெர்லினோவிற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், இது குறித்து பள்ளி முதல்வர் உமரிடம், முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment