Friday, 24 April 2015

இது 100% வீக் பாய்ஸூக்கு தான்!!


சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக கெட்டுப் போயிருக்கும் இந்த காலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உடல் எடையை குறைக்க மக்கள் முயற்சிக்கின்றனரோ அதே அளவு மக்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்கவும் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்.
மெல்லிய தேகத்துடன் உலாவருபவர்கள், தாங்களும் சற்று உடற்கட்டோடு நல்ல தேகத்துடன் இருக்க வேண்டும் என்று பலவற்றை முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் உடல் எடையை அதிகமாக்கும் தன்மை கொண்ட பழங்களை இங்கு பார்க்கலாம்.
திராட்சை:
திராட்சையில் அதிகபடியான கலோரிகள் இருக்கின்றது. எனவே தினமும் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் பருகிவருவது உடலுக்கு மிகவும் நல்லது. மருத்துவர் கூற்றுப்படி திராட்சையில் 104 கலோரிகள் இருக்கின்றது.
ட்ரை ஃபுரூட்ஸ் & நட்ஸ்:
கண்ட கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக உலர் திராட்சை, நட்ஸ், பாதாம், முந்திரி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் இதில் இருக்கும் கொழுப்பு மற்றும் கலோரிகள் உங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
வாழைப்பழம்:
வாழைப்பழம் அதிகபடியான கலோரிகளைக் கொண்டுள்ளது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் நிச்சயம் சாப்பிட வேண்டும். மேலும் இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது.
மாம்பழம்:
மாம்பழத்தில் அதிகளவு விட்டமின்களும், கலோரிகளும் இருக்கின்றது. இதனால் இதனை அதிகமாக சாப்பிட்டு வருபவர்களும் தங்களின் உடல் எடையை நன்றாக அதிகரிக்கலாம்.
அவகேட்டா:
அவகேட்டாவில் சுமார் 400 கலோரிகள் இருக்கின்றது. இதனை அப்படியே சாப்பிடுவது நல்லது. பிடிக்காதவர்கள், ஜூஸாகவோ அல்லது மில்க் ஷேக் போலவோ செய்து சாப்பிடுவது நல்லது.
அத்திபழம்:
தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவது, உடல் எடையை அதிகரிப்பதுடன், உங்களை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

No comments:

Post a Comment