Friday, 24 April 2015

அவர் கிடைக்காவிட்டால்.. திருமணமே செய்துகொள்ள மாட்டேன்..!


பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று அனைத்து சினிமா திரையிலும் பம்பரமாக சுழன்று வருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது விஜய்யுடன் புலி படத்திலும், அஜித்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மனதுக்கு பிடித்தவர் கிடைக்காவிட்டால் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை காதலிப்பதாகவும், தெலுங்கு நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அண்மைகாலமாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இவற்றையெல்லாம் மறுத்தார் ஸ்ருதிஹாசன்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் எப்படிப்பட்டவரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டப்போது திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை. திருமணம் பற்றி சில நம்பிக்கையும் இருக்கிறது. கணவராக வருகிறவர் என் மனதை திருடுபவராக இருக்க வேண்டும். என் மனம் முழுக்க அவர் நிறைய வேண்டும். எல்லா விஷயங்கள் பற்றியும் அவரோடு நான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.
காரணம் திருமணம் என்பது சிக்கலானது. இதற்காக திருமண முறைக்கு நான் எதிர்ப்பு என எடுத்துக்கொள்ள கூடாது. என் நண்பர்கள் சிலர் அழகான திருமண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
என்னை பொருத்தவரை திருமணம் என்பது கூடையில் இருக்கும் பூக்கள் போன்றது. என் மனதை கேட்டால் அந்த பூக்கள் வேண்டாம். கூடையில் இருக்கும் உலர் பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக்கொள் என்றுதான் சொல்லும். மேலும் சினிமாவில் இருப்பவரை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.

No comments:

Post a Comment