Friday, 24 April 2015

பெட்ரோல் இல்லை தண்ணீரில் ஓடும் மோட்டார் சைக்கிள்!!


இன்று வாகன ஓட்டிகளின் பெரும் பிரச்சனை பெட்ரோல். அதிக விலை மட்டுமல்ல, பெட்ரோலால், ஏற்படும் மாசும் ரொம்பவே அதிகம்.
இந்த பெட்ரோலைக் கட்டுப்படுத்த, எலெக்ட்ரிக் எஞ்சின்கள், போன்ற எத்தனையோ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை அந்த அளவு கைக் கொடுக்க வில்லை. இந்நிலையில், தண்ணீரில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிள் ஒன்றை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி, ஆட்டோமொபைல் பேராசிரியர் லட்சுமணன் தலைமையில் மாணவர்கள் யோவன் பிரதீஷ்ராஜா, துர்கா பிரசாத் இணைந்து பெட்ரோலும், தண்ணீரும் சேர்ந்து இயங்கும் இந்த 'பைக்கை' வடிவமைத்துள்ளனர். இந்த 'பைக்கில்' தண்ணீர் 'டேங்கும்,' துருபிடிக்காத இரும்பால் ஆன கருவியும் தனியாக உள்ளது.
இக்கருவி, நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பெட்ரோல் 'டேங்கிற்கு' அனுப்புகிறது. 400 மி.லி., நீரை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதன் மூலம், சாதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீ., செல்ல கூடிய வாகனத்தை 120 கி.மீ., வரை செல்லும் அளவுக்கு செலுத்தலாம்.
இது குறித்து பேராசியர் லட்சுமனன் கூறுகையில், ”ஹைட்ரஜனை பிரிக்க பிளாட்டினம் பயன்படுத்துகின்றனர். இதற்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். நாங்கள் துருப்பிடிக்காத இரும்பை பயன்படுத்துவதால் ரூ.2 ஆயிரம் போதும். 'பைக்கை' ஓட்டும்போது மாசு இருக்காது. தற்போது 50 சதவீத பெட்ரோல் தேவை உள்ளது. அதையும் குறைக்க முயற்சி செய்கிறோம்,” என்றார்.
இந்த கண்டுபிடிப்பு இன்னும் மேம்படுத்தப்பட்டால் பெரும் வரவேற்பைப் பெறும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment