பிரிட்டனில் வரும் மே மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கீத் வாஜ் என்பவர் போட்டியிடுகிறார். இங்கிலாந்தின் லீசெஸ்டர் (Leicester) என்ற பகுதியில் இங்கிலாந்தின் தொழிலாளர்கட்சியின் சார்பில் கீத் வாஜ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களைக் கவரும் வண்ணமாக பாலிவுட் ஸ்டார் அமிஷேக் பச்சனை இங்கிலாந்தின் லீசெஸ்டர் பகுதிக்கு வரவழைத்து வாகனத்தில் மக்கள் மத்தியில் அழைத்துச் சென்று வாக்கு சேகரித்துள்ளார்.
மேலும், லீசெஸ்டர் பகுதி மக்களுடன் நடந்த கேள்வி - பதில் நிகழ்ச்சியில், கீத் வாஜுடன், அபிஷேக் பச்சன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பச்சனின் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கால்பந்து அணியின் தலைவர் அனுபவம் குறித்த பல கேள்விகளுக்கு விடையளித்தார். இதன் பின்னர், பெல்கிரேட் ரோடு மற்றும் உபிங்கம் ரோடு பகுதிகளில், கீத்வாஜ் மற்றும் பச்சன் பிரசாரம் செய்தனர்.
அப்பகுதியில் இருந்த, ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பச்சனை வரவேற்றனர். பிரச்சாரம் செய்த போது, அபிஷேக் பச்சன், 'எனது குடும்ப நண்பரான கீத்வாஜ் வெற்றி பெற்றால், லீசெஸ்டர் மக்களுக்காக கடினமாக உழைப்பார். பிரிட்டனில் உள்ள இந்தியர்களின் உண்மையான தலைவர்' என்று கூறியுள்ளார்.







No comments:
Post a Comment