Friday, 24 April 2015

ஓவராக வாய்விட்ட மணிரத்னம் மனைவி.. பதிலடி கொடுத்த கமல்..!


மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ’ஓ காதல் கண்மனி’. இப்படம் வெளிவருவதற்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது இதில் கலந்துக்கொண்டு பேசிய மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி “உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க.
எப்படி குவாலிஃபைட் பியூப்பிள்தான் படத்துல நடிக்க முடியுமோ, சினிமாட்டோகிராபி பண்ண முடியுமோ, ரகுமான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ, அதே மாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான், விமர்சனம் எழுதணும். நீங்கள்லாம் இருக்கும் போது, எல்லாரையும் எழுத விட்றாதீங்க. முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க.
இப்ப கம்ப்யூட்டர் உலகத்துல, மவுசை மூவ் பண்ண தெரிஞ்சவங்கள்லாம் எழுத்தாளர் ஆகிட்டாங்க என்று பேசினார். சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் சுஹாசினை திட்டியும் வந்தனர்.
இந்நிலையில், சுஹாசினியின் கருத்து குறித்து வார இதழ் ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் கமல். "மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்' என்று சுஹாசினி சொல்லி இருக்காங்களே என்று கமலிடம் கேட்டதற்கு அவர், "அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான்.
ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்!'' என்று கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment