Friday, 24 April 2015

நடிகையுடன் நடிகை நெருக்கம்.. காதை கடிக்கும் திரையுலகம்..!


கேடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பிறகு தெலுங்கில் நடிக்க கவனம் செலுத்தியவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நண்பன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் பாலிவுட் ஹீரோயின்களின் கடும் போட்டியால் இலியானாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். ஒரே வழி சக நடிகை யாரையாவது தோழி ஆக்கிக்கொள்வதுதான் என்று முடிவு செய்தார். அதற்கு தோதாக அவருக்கு கிடைத்தவர் அலியா பட்.
இருவரும் ஸ்லிம் தோற்றத்துக்காக உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு யாஸ்மின் என்ற ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளனர். தினமும் அவரது பயிற்சி கூடத்தில் இலியானா, அலியா பட் சந்தித்துக்கொள்வதுடன் நெருக்கமாக சில விஷயங்களை பகிர்ந்துகொள்கின்றனர். அதோடு புதிய பட சான்ஸ் குறித்தும், இண்டஸ்ட்ரி வம்பு குறித்தும் மனம்விட்டு பேசுகின்றனர்.
சமீபத்தில் ஒன்றாக சந்தித்துக்கொண்ட தோழிகள் ஒரே நடைபயிற்சி மெஷினில் எதிரெதிரே நின்றபடி பயிற்சி செய்தனர். ஆனால் இதுபோன்ற பயிற்சியை மற்ற யாருக்கும் பயிற்சியாளர் சிபாரிசு செய்ய மறுத்துவிட்டார். இலியானா, அலியா பட் இருவரின் நெருக்கமும் மற்ற ஹீரோயின்களுக்கு கடுப்பேற்றி உள்ளதாம்.

No comments:

Post a Comment