ஆஸ்காரில் பல விருதுகளை அள்ளிய கிராவிட்டி உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் (Sandra Bullock). இவர் 2015 ஆம் ஆண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருந்து வெளிவரும் " பியூப்பிள் " என்றா வார இதழ் உலகின் அழகான பெண் யார் என்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பல அழகான பெண்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. கடைசியாக சாண்ட்ரா புல்லக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
50 வயதான சாண்ட்ரா, அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, " இது மிகவும் கேலியாக இருக்கிறது. உண்மையான அழகு அமைதியில் இருக்கிறது. நாம் அவரைப் போல் இருக்க வேண்டும். இவரை போல் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை தான் என்றாலும், அப்படி எண்ணாமல், நல்ல மனிதராக இருங்கள்.
நல்ல அம்மாவாக இருங்கள். நல்லவற்றை செய்யுங்கள். என்னைப் பொறுத்த வரையில் அழகாக இருக்க முயற்றி செய்யாதவர்களே அழகாக தெரிகிறார்கள் " என்றார். இவருக்கு 5 வயதில் லூயிஸ் என்ற மகன் இருக்கிறான். 50 வயதில் உலகின் மிக அழகான பெண்ணாக சாண்ட்ரா புல்லக் தேர்வாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.







No comments:
Post a Comment