சமீபத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் ‘மை சாய்ஸ்’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை யு-டியூப்பில் 2 நாளில் 3 லட்சத்து 33 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்த்தனர்.
இந்த குறும்படத்தில் ’பெண்கள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம், திருமணத்திற்கு முன், பின் எப்போது வேண்டுமானாலும் செக்ஸ் வைத்துக்கொள்வேன். எங்களுக்கு யாருடம் வாழ பிடிக்கின்றதோ, அவர்களுடன் வாழ முழு உரிமை உள்ளது. அது லெஸ்பியனாக கூட இருக்கலாம்.’ என்று அந்த ஆவணப்படத்தில் தீபிகாவின் குரல் பின்னணியில் ஒலிக்கின்றது.
இந்தியப் பெண்கள் தங்களின் ஆடை, திருமண வாழ்க்கை, தனித்து இருப்பது அல்லது லெஸ்பியனாக இருப்பது ஆகியவற்றில் சுந்திரமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை இந்த குறும்படம் வலியுறுத்துகிறது. இந்த குறும்படம் இணையதளத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்தாலும் பாலிவுட் வட்டாரத்தில் அனலைக் கிளப்பி உள்ளது.
“தாழ்ந்த நிலையில் உள்ள பெண்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதுதான் பெண் விடுதலை. ஒரு பெண் இப்படியெல்லாம் பேசலாமா, இதெல்லாம் ஒரு பொழப்பா?” என்று சீறியிருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா.
“இந்திய கலாச்சாரத்துக்கே வேட்டு வைக்க பார்க்கிறார்” என்று கொதித்திருக்கிறார் கங்கணா ரனாவத். அதேபோல் பல பெண் பிரபலங்கள் இது பெண்களின் சுதந்திரத்தைச் சொல்வது போல இல்லை, வரம்பு மீறி உள்ளதாக விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.







No comments:
Post a Comment