தெரிந்து கொள்வோம்: கோயிலினுள் ஆண்கள் மேற் சட்டையை கழற்றுவது ஏன்…??
சில கோயில்களில் நுழையும் போது, மேல் சட்டையை ஆண்கள் கழற்றி விட்டு செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.
நம் முன்னோர்கள் தாம் மரியாதை வைத்திருப்பவர்களுக்கு தமது பணிவை காட்டும் நோக்கில் ஆண்கள் மேல் சட்டையை அகற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சில கிராமப்புறங்களில் இன்றும் இவ்வழக்கம் ஜீவித்துக் கொடிருக்கிறது.
அவ்வகையில் கடவுளுக்கு தமது மரியாதையை செலுத்தும் முகமாக இவ்வாறு மேற்சட்டையை அகற்றிவிட்டு செல்லும் வழமை இருந்திருக்கலாம். இதை மேலை நாடுகளில் தொப்பியை கழற்றி (hats off) மரியாதையை செய்வதற்கு ஒப்பாக கொள்ளலாம்.
இது தவிற, பெரும்பாலும் கோயில்களினுள் ஊதுபத்தி, கற்பூரம், தீபம் என வெப்பத்தை ஏற்படுத்தும் காரணிகள் அதிகம். இதனால், உள்ளே செல்லும் போது மேற்சட்டையை அகற்றிவிட்டு செல்லுதல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப் படுத்தும் விதமாகவும் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம்.
அடுத்ததாக, கடவுள் சிலைகளில் இருந்து வெளியாகும், சக்தி மனிதனின் மார்புப்பகுதி வழியாகத் தான் ஊடுருவும் என்ற நம்பிக்கை இருந்தது. எனவே கடவுளை வணக்கச் செல்லும் போது மேற்சட்டையை ஆண்கள் கழற்றும் வழக்கம் இருந்ததிருக்கலாம்.
ராசிகளுக்கான இன்றைய தின பலன்
மேஷம் - அனுமதி
ரிஷபம் - சிரமம்
மிதுனம் - பாசம்
கடகம் - நற்செயல்
சிம்மம் - பாராட்டு
கன்னி - வெற்றி
துலாம் - கவணம்
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - சுகம்
மகரம் - நலம்
கும்பம் - பிரயானம்
மீனம் - கீர்த்தி







No comments:
Post a Comment