தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாரம்பரியமான வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. துன்பப்படுத்தப்படும் வன விலங்குகள் பட்டியலில் ஜல்லிக்கட்டுக் காளையை சேர்த்த மத்திய அரசு, இந்த முறை அறுவடைத் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதை எதிர்த்து, தமிழகம் எங்கும் உண்ணாவிரதங்களும், போராட்டங்களும், ஆர்ப்பட்டங்களும் நடந்தும் மத்திய அரசு இதற்கு பிடி கொடுக்கவில்லை. இதனால், தமிழக மக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாயினர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர், ஜல்லிக்கட்டுக்கான தடை விலக்கப் படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று தலைநகர் டெல்லியில், உலக ஆய்வக விலங்குகள் தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல்துறை சார்பில், விலங்குகள் நலன் சார்ந்த இணையதள சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இதனை மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேத்கட் ஆரம்பித்து வைத்தார். இதைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசியதாவது:
மக்களின் மதம், கலாச்சாரம் சார்ந்த ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இது போன்ற போட்டிகளுக்கு தடை விதிப்பதால் பாரம்பரிய கலாச்சார மான்பு சீர்குலையும் அபாயம் ஏற்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க விரைவில் கொள்கை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற விழாக்களில் விலங்குளின் நலன்களுக்கு எதிரான செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.







No comments:
Post a Comment