Tuesday 24 February 2015

BMW i8 ஹைப்ரிட் கார் எப்படி இருக்கு???


BMW i8, ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான BMW –ன் புதிய தயாரிப்பு. சமீபத்தில் தான் இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
இது எதிர்காலத்தின் கார் என்று கூறப்படுகிறது. காரணம் இதன் ஹைப்ரிட் தன்மைதான். இந்தக் காரின் முன் பக்க வீல்கள் எலெக்ரிக் மோட்டாரால் இயங்குகின்றன. பின்பக்க வீல்கள் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயங்குகின்றது.
இதனாலேயே இந்த கார் 45 kmpl மைலேஜ் கொடுக்கின்றது. 4 செக்கென்டுகளில் 0-100 கிமி வேகம் கொடுக்கின்றது. இதில் இணைக்கப்பட்டுள்ள எலெக்ரிக் மோட்டார் ஆனது, 5.2kWh பேட்டரி மூலம் செயல்படுகிறது. இந்த பேட்டரியானது 3 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடும்.
6 ஸ்பீட் கியர் சிஸ்டம் உடன் செயல்படும் இது, முதல் ஹைப்ரிட் வகை ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். ஆனால் இதன் விலை மலைக்க வைக்கின்றது. அது சரி ஸ்போர்ட்ஸ் கார்கள் பக்கம் சதாரண மக்கள் செல்ல முடியுமா என்ன?? ஷோரும் விலையே ரூ. 2.3கோடிகள் ஆகும்.

No comments:

Post a Comment