Wednesday 25 February 2015

இனி நோ ஆபாசம்!!? கூகுள் எடுத்துள்ள அதிரடி முடிவு!!


இனிமேல் ஆபாச படம் மற்றும் வீடியோக்களுக்கு கூகுளில் இடமில்லை, வருகிற மார்ச் 23 முதல் இது நடைமுறைப் படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுளுக்கு சொந்தமான பிரபல 'Blogger'-ல் வரும் மார்ச் 23-ந்தேதி முதல் ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை 'ஷேரிங்' செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல், பாலுணர்வை தூண்டக்கூடிய ஆபாசக்காட்சிகள் அடங்கிய வீடியோக்களை அப்லோடு செய்யவும் தடைவிதிக்கப்படுகிறது.
தற்போது இருக்கும் Blogகளில் ஏதாவது ஆபாச தகவல்கள் இருந்தால் கூகுள் விரைவில் அந்த Blogகளுக்கு Notification-களை அனுப்பும். எனினும், அந்த Blogகளில் உள்ள தகவல்கள் எதையும் கூகுள் அழிக்காது. அதற்கு பதிலாக Blog-ஐ உருவாகியவர்கள் மட்டுமே பார்க்க முடிகிற வகையில் செய்யப்படும்.
ஏற்கனவே ஆபாச போட்டோ, வீடியோக்கள் அடங்கிய Blog-ஐ வைத்திருப்பவர்கள் Google Takeout-மூலமாகவோ அல்லது .xml file-ஆக எக்ஸ்போர்ட் செய்தோ Blogலிருந்து நீக்கி சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியையும் கூகுள் வழங்கியுள்ளது.
ஆபாச காட்சிகளை நீக்குமாறு புதிதாக கட்டுப்பாடுகளை விதித்தாலும் எங்களால் முழுமையாக அவற்றை இண்டர்நெட்டில் இருந்து நீக்கிவிட முடியாது. கலை, ஆவணப்படங்கள், விஞ்ஞான ஆய்வறிக்கைகளின் வடிவில் அவை இருக்கவே செய்யும் எனவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment