Wednesday 25 February 2015

பண மழை பெய்தது துபாய்ல இல்லை!! குவைத்திலயாம்!! எங்க கிட்ட ரசீது இருக்கு!!


கடந்த பிப்ரவரி 9ம் குவைத்தில் பலத்த காற்று வீசியது. இந்நிலையில், குவைத் நகரின் அல் சூர் தெருவில் அமைந்துள்ள, ஃபேட் பர்கர் என்ற ரெஸ்டாரண்ட் முன்னிலை காற்றுடன் சேர்ந்து 20 குவைத் தினார் முதல் 500 குவைத் தினார் வரையிலான நோட்டுகள் பறந்து வந்தன.
இதைப் பார்த்த பொதுமக்கள் அங்கும் இங்கும் பறந்து வந்த பணத்தை அடித்து பிடித்துக் கொண்டு தரையிலிருந்து எடுத்தனர். கார் பைக்கில் வந்தவர்கள் கூட, இந்த பண மழையால் கவரப்பட்டு, வாகனங்களை நிறுத்தி பணத்தை எடுத்துள்ளனர்.
இந்த பண மழை எங்கிருந்து அடித்துக் கொண்டு வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், சிலர் வங்கி அல்லது ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம், கடுமையான காற்றால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.
இந்த விஷயம் குவைத் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், சிலர் இந்த சம்பவத்தை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சமூக வலைதளங்களில் இது துபாயில் நடந்ததாக பரப்பப் பட்டுவிட்டது. ஆனால், இச்சம்பவம் உணமையிலேயே துபாயில், நடக்க வில்லை, குவைத்தில் தான் நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கல்ஃப் செய்தி நிறுனமொன்று, சம்பவத்தை நேரில் கண்டவரையே நேர்காணல் எடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்ற ஃபேட்பர்கர் ரெஸ்டாரண்டின் மேனஜரான ஷஃபிக் ஹமாஸ் என்பவரிடம் தான் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேகாணலில் அவர் கூறியதாவது,
”9ம் தேதி அதிகாலை 5 மணி முதலே காற்று பலமாக வீசி வந்தது.”
”அப்போது திடீரென காற்றோடு பண நோட்டுகள் அடித்து வந்தன.”
”இதைப் பார்த்த பொதுமக்கள் உடனே அதை பெருக்க ஆரம்பித்து விட்டனர்.”
”இவை பெரும்பாலும் 20 தினார்களாக இருந்தன.”
”மொத்தமாக அடித்து வந்த பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால், சாலை எங்கும் பணம் கொட்டிக் கிடந்தது.”
பணமழை பொசியும் வீடியோ கீழே


No comments:

Post a Comment