Thursday 26 February 2015

இங்கிலாந்து, அமெரிக்கவை அச்சுறுத்திய பிரிட்டன் தீவிரவாதியின் முகத்திரை கிழிந்தது!!


மேற்கு நாட்டு பினைக் கைதிகளை தலைவெட்டிக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் ‘ஜிஹாதி ஜான்’ என்பவரது அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக் மற்று சிரியாவில் தீவிரவாத செயல்களால் நாட்டின் பல பகுதீகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு.
இவ்வமைப்பு அவ்வப்போது மேற்கு நாடுகளான, அமெரிக்கா மற்றும் பிரிட்டனை அச்சுறுத்துவதற்காக, அங்கிருந்து பினைக் கைதிகளை பிடித்து வந்து தலையை தனியாகத் துண்டித்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தது.
சென்ற ஆண்டு ஆகஸ்டு முதல், அமெரிக்க பத்திரிக்கை புகைப்படவியலாளர் ஸ்டீவன் சோட்லோஃப்(Steven Sotloff), பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளர் டேவின் ஹைன்ஸ் (David Haines), பிரிட்டன் டாக்ஸி ஓட்டுனர் (Alan Henning), அமெரிக்க உதவியாளர் அப்துல் ரகுமான் என்கிற பீட்டர் (Abdul-Rahman Kassig or Peter) ஆகியோரை பினைக் கைதிகளாக பிடித்து வைத்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டனை அச்சுறுத்துவதற்காக, ஒருவர் பின் ஒருவராக தலையை வெட்டிக் கொன்றது.
இதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு உலகறியச் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு. இந்த தலையை வெட்டிக் கொன்ற வீடியோக்களில், பிரிட்டன் வழக்கு ஆங்கிலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கருத்துக்களை வெளியிட்டவர் தான் ‘ஜிஹாதி ஜான்’.
ஆரம்பத்தில் பிரிட்டனைச் சேர்ந்தவராக நம்பப் பட்ட இவரது அடையாளம் சரியாகத் தெரியாததால், ’ஜிஹாதி ஜான்’ என்று பாதுகாப்புப் படைகள் குறிப்பிட்டன.
தற்போது இவர் குறித்த முழுவிபரங்களையும் பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். இந்த தகவல்களின் படி, இவரது உண்மையான பெயர் மொஹம்மத் எம்வாசி. குவைத்தில் பிறந்த இவர், பிரிட்டனில் கல்லூரி வரைப் பயின்று பின்னர் 2013-14ம் ஆண்டுகளில், சிரியா சென்று தீவிரவாதிகளுடன் இணைந்துள்ளார்.
இவர் குறித்து மேலும் தெரியவருவதாவது:
1988: குவைத்தில் பிறந்தார்
1994: இங்கிலாந்து சென்றார்.
2009: இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகத்தில் (University of Westminster) கப்யூடிங் டிகிரி (computing degree) முடித்தார்.
2009 ஆக: இரண்டு நண்பர்களுடன் டான்சானியா பயணித்தார். அங்கிருந்து இங்கிலாந்தின் டோவர் நகரிற்கு வந்தார்.
2009 செப்.: குவைத்தில் இருக்கும் தன் தந்தையின் குடும்பத்துடன் தங்குவதற்காகச் சென்றார்.
2010 ஜூலை: இங்கிலாந்தில் தங்கிவிட்டு செல்வதற்காக வந்தார். ஆனால், குவைத்தில் வீசா முடிந்ததால், இங்கிலாந்திலேயே தங்க வேண்டியதானது.
2012: செல்டா ஆங்கிலம்(Celta English) என்றழைக்கப்படும் ஆங்கிலம் கற்பிக்கும் கோர்ஸை முடித்தார்.
2013: தன் பெயரை மாற்றிக் கொண்டார். மீண்டும் குவைத்திற்கு செல்ல முயன்றார். இந்நிலையில், இவரைக் காணவில்லை என்று இவரது பெற்றொர் புகார் பதிவு செய்துள்ளனர். நான்கு மாதங்கள் கழித்து காவல்துறையினர் இவர் சிரியா சென்றதைக் கண்டு பிடித்தனர்.
பிரிட்டனின் மேற்கு லண்டனில் வசித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு சொமாலியாவுக்கு இவர் சென்று, அல்ஷபாப் அமைப்புக்கு நிதி திரட்டியது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிஹாதி ஜான் என்றழைக்கப்படும், மொஹம்மத் எம்வாசி குறித்து பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், சில பல காரணங்களால், இதுவரை இதனை வெளியிடாமல் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment