Friday 27 February 2015

66 பந்தில் 162 ரன்கள் விளாசி சாதனை படைத்த de villiers…!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி புதிய சாதனைகள் படைத்ததுடன், உலகக் கோப்பையில் தனது தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுப் பதிவுக்கும் வித்திட்டார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 409 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் களமிறங்கிய ரூசோ - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பாக விளையாடியது. ரூசோ 61 ரன்களில் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் உலகக் கோப்பையில் 52 பந்துகளில் சதத்தை எட்டி, இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் தன்வசப்படுத்தினார். 50 பந்துகளில் சதத்தை எட்டிய கெவின் ஓ பிரையனிடம் முதல் அதிவேக சதம் என்ற சாதனை உள்ளது. அதேவேளையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஒன்றரை சதம் (150 ரன்கள்) என்ற சாதனையை டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.
டிவில்லியர்ஸ்சின் விளாசல் துணையுடன், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சரித்திரத்தை இன்று தொட்டுள்ளது. 2007-ல் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 413 குவித்ததே இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment