Thursday 26 February 2015

இரயில்வே பட்ஜெட்: ஜெ., மோடி ஒருபக்கம் - கருணாநிதி, காங்கிரஸ் மறுபக்கம்!!


இன்று இந்தியாவின் சமூக வலைதளங்களில், பரபரப்பாக பேசப்பட்டு வருவது ரயில்வே பட்ஜெட்.
இந்த ரயில்வே பட்ஜடில் ரயில் கட்டணம் உயர்வு இடம்பெற வில்லை என்றாலும், சிறப்பம்சங்கள் அனைத்தும் வழக்கமான ஒன்றாகவே இருந்தது பலருக்கு அதிருப்தியையே கொடுத்துள்ளது.
எதிர்பார்ப்புகளுடன் இருந்த மக்களுக்கு, இந்த ரயில்வே பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தைத் தந்து இருக்கிறது என்பது எதிர்கட்சிகளின் கருத்து.
தமிழகத்தின் முன்னாள் தலைவர்கள் உட்பட சிலர் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வைகோ, கருணாநிதி, விஜயகாந்த் உள்ளிட்ட பலர் எதிர்பும் தெரிவித்துள்ளனர்.
இரயில்வே பட்ஜட் குறித்து அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் வாருங்கள்.
யாரையும் பாதிக்கவில்லை: பிரதமர் மோடி
2015 ரயில்வே பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது. எதிர்காலத்தையும், பயணிகளையும் மையமாகக் கொண்டது. சாதிப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும், உறுதியான திட்டத்தையும் கொண்டது.
முதன்முறையாக ரயில்வே துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பணம் எங்கிருந்து வரும் - காங்கிரஸ்
புதுமையை புகுத்தும் சுரேஷ் பிரபுவின் சிந்தனையை மதிக்கிறேன். இது சராசரிக்கும் குறைவான பட்ஜெட். ரயில்வே துறையை நவீனமயமாக்க அதிக முதலீடு தேவை.
அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பிரபு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க., வாய்ப்பு தவறவிட்டது – கெஜ்ரிவால்
ரயிலை அதிகமாகப் பயன்படுத்தும் பாமர மக்களுக்கு தேவையான கட்டண குறைப்பு இடம்பெறவில்லை. சிறப்பம்சங்கள் யாவும் இரயிலில் குறைவாகப் பயணிக்கும் மேல் தட்டு மக்களுக்கு சாதகமாகவே இருக்கிறது.
ஊழல் அகற்றல் குறித்த திட்டங்கள் எதுவும் இடம்பெற வில்லை. கிடப்பில் கிடக்கும் திட்டங்கள் சரிசெய்ய வழி செய்யவில்லை. அந்நிய முதலீடுகள் குறித்து தெளிவாக விவரிக்கவில்லை.
முக்கியமாக புதிய ரயில்கள் இயக்குவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே பட்ஜெட் மொத்தமாக, ரயிலை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அதை தவறவிட்டுவிட்டது.
இது வெறும் காணல் நீர் – வைகோ
ரயில்வே துறையின் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்தல், இரயில் நிலையங்களைத் தூய்மைப்படுத்துதல், பசுமைக் கழிவறைகள் ஏற்படுத்துதல், பெண் பயணிகள் பாதுகாப்பு, முக்கிய இரயில் நிலையங்களில் வைஃபை வசதி, குறைந்த விலையில் தரமான குடிநீர் விற்பனை போன்றவை அனைத்தும் கடந்த இரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்று இருந்தன.
ஆனால், நடைமுறைக்கு வரவில்லை. மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட், காகித அறிவிப்பாகவும், கானல் நீராகவும் காட்சி அளிக்கின்றது விஜயகாந்த்
விஜயகாந்த் வரவேற்பு
மத்திய அரசின் 2015-2016 நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டது என்பதும், ஏழை மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது, பெண்கள் பாதுகாப்பிற்காக, ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படுவது, முன்பதிவு கால அவகாசத்தை 120 நாட்களாக நீடித்ததும், பயணிகள் வசதிக்காக 67% கூடுதல் நிதி ஒதுக்கியது, பெட்டிகளின் உள்ளே நவீன மாற்றங்கள் செய்வது ஆகியன வரவேற்கத்தக்கவை.
நாடு முழுவதும் 96 ஆயிரம் கோடி மதிப்பில் 77 திட்டங்கள் விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, சர்வே முடிந்த நிலையில் சென்னை-ஸ்ரீபெரும்பதூர், மதுரை-கோட்டயம் உள்ளிட்ட சுமார் 24 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும், பணி நடந்து வரும் நிலையில் சென்னை-கடலூர், பழனி-ஈரோடு உள்ளிட்ட சுமார் 9 திட்டங்கள் கைவிடப்பட உள்ளதாகவும் பல்வேறு செய்திகள் வருகின்றன.
இதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
எந்த வகையிலும் வரவேற்க முடியாதது - கருணாநிதி
வரவேற்க முடியாது இந்திய ரெயில்வே பட்ஜெட் வரலாற்றிலேயே இந்த முறை தான் முதல் தடவையாக புதிய ரெயில்களோ, கூடுதல் ரெயில்களோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஈரோடு - பழனி ரெயில் திட்டம் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கி, இந்த ஆண்டு நிறைவேற்ற வேண்டும் என்றும் நான் விடுத்த அறிக்கையிலே கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஆனால் மத்திய ரெயில்வே மந்திரி மத்திய அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் புதிய ரெயில்களை அறிவிக்க முடியாத சூழ்நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள்.
புதிய திட்டங்களை அறிவிக்காததோடு பல திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளன. எனவே, எந்த வகையிலும் வரவேற்க முடியாத பட்ஜெட்டாகவே மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது. காங்கிரஸ் புதுமையை புகுத்தும் சுரேஷ் பிரபுவின் சிந்தனையை மதிக்கிறேன்.
இது சராசரிக்கும் குறைவான பட்ஜெட். ரயில்வே துறையை நவீனமயமாக்க அதிக முதலீடு தேவை. அதற்கான பணம் எங்கிருந்து வரும் என்று பிரபு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
வரவேற்கத்தக்கது - ஜெயலலிதா
எந்த வகையிலும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான நடவடிக்கை மூலம் ரயில்வே துறையை மேம்படுத்த திட்டமிட்டி ருப்பது வரவேற்கத்தக்கது.
பயணி கள், குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்பு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையத் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
புதிதாக திட்டமிடப்பட்டுள்ள வைர நாற்கர அதிவேக ரயில் இணைப்பு திட்டத்தின் வழித்தடங் களில் சென்னைக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். புதிய ரயில் திட்டங்கள், முன்பு அறிவிக்கப்பட்டு நிதி இல்லாததால் செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் குறித்து எதுவும் கூறப் படவில்லை.
தமிழகத்தில் மட்டும் 22 ரயில் திட்டங்கள் இதுபோன்று நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய ரயில்கள் குறித்து அறிவிக்கும்போது, இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். பறக்கும் ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் திட்டம் குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.
வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் மிகவும் எதிர்பார்க் கப்படும். அதுபோன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக் கிறது.

No comments:

Post a Comment