Tuesday 24 February 2015

ஷாருக் கானுடன் இணையும் கத்ரீனா…!


ஷாருக்கான் நடிக்கவுள்ள புதிய திரைப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃபை நடிக்கவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த வருட இறுதியில் வெளியான ஹேப்பி நியூ இயர் படத்தின் பின்னர் ஆதித்ய சோப்ராவின் தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கும் படத்தில் ஷாருக்கான் நடிப்பதற்குத் தயாராகி வருகிறார்.
அதன் பின்னர் ரோஷித் சர்மா இயக்கும் படமொன்றில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கானின் சகோதரராக நடிகர் வருண் தவானும் நடிக்கவுள்ளார்.
வருணுக்கு ஜோடியாக நடிப்பதற்கு கிரீத்தி சனூனை தயாரிப்பாளர்கள் நாடியுள்ளனர். மும்பை, கோவா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மார்ச் மாத இறுதியில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு வெளியான ஜாப் தேக் ஹெய்கான் திரைப்படத்தில் ஷாருக் கானும் கத்ரினா கைபும் இணைந்து நடித்திருந்தனர். ஷாருக் கான் இறுதியாக நடித்த சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment