Thursday 26 February 2015

ஆன்மீகப் பார்வை!! திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில்!!!


சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள திரு பார்த்தசாரதி திருக்கோவில் ஆனது பழமையான கோவில்களுள் ஒன்றாகும். இங்கு உற்சவர் பார்த்தசாரதி பெருமாள்.
இக்கோவில் 8 நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என்று வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் மூலவராக வேங்கட கிருஷ்ணர் இருந்த போதும், இக்கோவில் பார்த்தசாரதி கோவில் என்றே வழங்கப்படுகிறது.
இக்கோவிலானது பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. மேலும், சாரதி என்ற பெயருக்கு ஏற்ற பெருமாள் இங்கு மீசையுடன் காணப்படுகிறார். இது இந்தக் கோவிலில் மட்டுமே காண முடியும் என்பது சிறப்பு.
இங்கு காட்சி தரும் நரசிம்மரை வணங்கினால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மேலும், இங்குள்ள பெருமாள் கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியவற்றை அளிக்கின்றார்.
திருமாலின் பக்தனான சுமதிராஜன் என்னும் மன்னனுக்கு,பெருமாளை குருக்ஷேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனாக, தரிசிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை தந்தருளும்படி பெருமாளிடம் வேண்டினார். சுவாமியும் இங்கு தேரோட்டியாக காட்சி தந்தார்.
மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் தங்கும்படி வேண்டவே, பாரதப் போரில் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார்.
பாரதப்போரில் அர்ச்சுனன் மீது பீஷ்மர் தொடுத்த அம்புகளையெல்லாம் தானே முன்னின்று ஏற்றுக் கொண்டு அர்ச்சுனனுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததை விளக்கும் வகையில் இன்றும் பார்த்தசாரதி முகத்தில் அம்பு பட்ட வடுக்கள் காணப்படுகின்றன.
"வேங்கடகிருஷ்ணர்' என்றும் பெயர் பெற்றார். இத்தலத்து உற்சவர், பார்த்தசாரதி ஆவார். பிற்காலத்தில் இவர் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோயில் அழைக்கப்பட்டது.

No comments:

Post a Comment