Thursday 26 February 2015

16 வருடங்கள் கழித்து தோன்றும் அபூர்வமான சூரிய கிரகணம்!!?


வருகின்ற மார்ச் மாதம் மிகவும் அபூர்வமான சூரிய கிரகணம் ஒன்று நிகழப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது 16 வருடங்கள் கழித்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதற்கு முன்பு இது 1999ஆம் ஆண்டு ஏற்பட்டதாகக் கூறியுள்ளர்.
வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற உள்ள இந்த சூரிய கிரகணத்தால் பகல் வேளை இரவு போல தோன்றுமாம். மேலும் இந்த நிலை சுமார் 90 நிமிடங்கள் வரை நீடிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதில் லண்டன் உள்ளிட்ட ஜரோப்ப நாடுகளில் 84 சதவீத சூரிய ஒளி மறையும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் இது போன்ற ஒரு கிரகணம் 2026ஆம் ஆண்டு நிகழலாம் என்று கூறியுள்ளனர்.
1999-ல் நிகழ்ந்த கிரகணத்தின் வீடியோ கீழே...

No comments:

Post a Comment