Tuesday 24 February 2015

66 கோடி சொத்து எப்படி வந்தது?? ஆதாரம் எங்கே??


ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு தீர்ப்பு மீதான மேல் முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
தீர்ப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வழக்கில், அரசு தரப்பு வக்கீல் பவானி சிங் தன் தரப்பு வாதத்துக்கு இன்னும் அவகாசம் கேட்டு வருகிறார்.
இதற்கு நீதிபதி, முடியாது என்று மறுத்ததுடன், 66 கோடி சொத்துக்கு என்ன ஆதாரம் என்று இரு தரப்பினரும் விளக்க வேண்டும் என்று கேட்டு கெருபிடி கொடுத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் இறுதி வாதங்கள் சென்ற வாரமே நிறைவடைந்துவிட்டது.
இதை அடுத்து மீதம் இருப்பது, அரசு தரப்பிலான இறுதி வாதம் தான். ஏற்கனவே அரசு தரப்பு வக்கீல், ஒரு வார காலம் அவகாசம் கேட்டார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு விசாரணை தினமும் நடந்தாக வேண்டும், என்று கூறி இறுதி வாதத்தை உடனே தொடங்க உத்தரவிட்டார் சிறப்பு நீதிபதி குமாரசாமி.
இதை அடுத்து வழக்கில் சம்பந்தப் பட்ட மெடோ அக்ரோ ஃபார்ம்,ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டு, இவ்வழக்கால் நிறுவனங்கள் முடங்கிப்போவதாகக் கூறி தங்களை வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர்.
கடந்த 3 நாட்களாக இந்த வாதம் நடந்து வருகிறது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, நிறுவனங்களின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
மெலும், இதே வாதத்தின் போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி குவித்ததாக எப்படி கணக்கிட்டீர்கள்? அரசிடம் இவ்வளவு சொத்துக்குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன, அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு மதிப்பீடு செய்த சொத்து மதிப்பீடு பட்டியல் எங்கே என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் தொடர்ந்து கேள்விகளாகக் கேட்டார்.
ஜெ., தரப்பில், தங்கள் தரப்பு மதிப்பீட்டு பட்டியல் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கு பவானி சிங், சாட்சிகளின் அடிப்படையிலும், ஆவணங்களின் அடிப்படையிலுமே சொத்துக் களை மதிப்பீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இறுதி வாதத்தை துவங்க 1 வாரம் அவகாசம் கேட்டார் பவானி சிங். இதற்கு பதிலளித்த நீதிபதி, ”உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி வழக்கை கூடிய விரைவில் முடித்தாக வேண்டும். எனவே அவகாசம் தர முடியாது. இறுதி வாதத்தை உடனே ஆரம்பியுங்கள்” என்று கூறினார்.
எனவே எதிர்வரும் ஒரு வாரம் வரை அரசு தரப்பு வாதம் நடைபெறும். இதை அடுத்த ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வழங்கப்படும். இதனடிப்படையில் பார்த்தால், மேல் முறையிட்டின் தீர்ப்பு வரும் மார்ச் மாதத்திற்க்கு உள்ளாகவே முடிந்து விடும் என்று கருதப்படுகிறது.

No comments:

Post a Comment