Tuesday 24 February 2015

இன்றைய தினம்....!! (பிப்ரவரி 25)


பிப்ரவரி 25
1932
இரண்டாம் உலகப் போரில் உலகை உலுக்கிய ஹிட்லருக்கு ஜெர்மன் குடியுரிமை கிடைத்த தினம்
இரண்டாம் உலகப் போர் என்றதும் நம் நினைவை எட்டுபவர் அடோல்ஃப் ஹிட்லர். ஜெர்மன் நாட்டின் நாசிக் கட்சியின் தலைவராக பதவி வகித்த இவர், இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்காற்றியுள்ளார்.
ஜெர்மனில் வசித்து வந்த யூதர்களை இவர் வதைத்தது, உலகின் மிகப் பெரிய வில்லன்களில் ஒருவர் என்ற பெயரை இவருக்கு வாங்கித் தந்தது. ஜெர்மனின் அரசியல் தலைவராக இருந்த இவர் பிறப்பால் ஒரு ஆஸ்திரியர் அல்லது ஹங்கேரியர்.
இவர் ஹங்கேரியராக இருந்ததால் ஜெர்மனியில் அரசியலில் ஈடுபடுவதற்கு சில சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த சிக்கல்களை தீர்பதற்காக 1932ம் ஆண்டு இவர் ஜெர்மன் குடிமகனாக மாறினார்.
1982
தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் பிறந்த நாள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரது தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா. இவர் இயக்குநர் செல்வராகவனின் இளைய சகோதரர். 2004ம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்தது, ரஜினியின் மருமகன் ஆகினார்.
இவர், தன் சகோதரர் செல்வ ராகவனின், “துள்ளுவதோ இளமை” படம் மூலம் சினிமாவுக்குள் வந்தார். இந்த படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை.
இருந்தாலும், அடுத்து வந்த காதல் கொண்டேன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து புதுப் பேட்டை, தேவதையைக் கண்டேன், பொல்லாதவன் உள்ளிட்ட படங்கள் இவரது பெயர் சொல்லும் விதமாக அமைந்தன.
ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். நடிப்பு திறமையுடன் சிறந்த பாடகர் என்ற பெருமையையும் பெற்றவர் தனுஷ். இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே அனைவரையும் கவரும் விதமாக அமைந்தன.
’வை திஸ் கொல வெறி டி’ பாடல் இந்திய முழுவதும் பிரபலமானது. தமிழைத் தொடர்ந்து இந்தியிலும் ராஞ்சனா,1 ஷமிதாப், ஆகிய படங்களை நடித்துள்ளார் தனுஷ். இவை மட்டுமல்லாது, சிறந்த தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
3, எதிர் நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். இன்றோடு இவருக்கு 32 வயது பூர்த்தியடைகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1988 - மாதிரி அணு ஆயுதத்தை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது.
1836 - சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்.
1837 - தாமஸ் டெவன்போர்ட், மின்சாரத்தில் இயங்கும் மோட்டருக்கான காப்புரிமத்தை பெற்றார்.
இன்றைய சிறப்பு தினம்
தேசிய நாள் - குவெய்த்
மக்கள் எழுச்சி நாள் - பிலிப்பைன்ஸ்

No comments:

Post a Comment