Wednesday 25 February 2015

இது 34வது முறை!! இனி என்னை அறிந்தால் ‘விவேக்’ மாதிரி தான் Airport போகனும் போல!!


சென்னை விமான நிலையத்தில் 34வது முறையாக மீண்டும் மேற்கூரை நொறுங்கி விழுந்தது. தொடர்ந்து நடந்து வரும், கட்டிட இடிபாடுகளை பார்த்தால், இனிமேல் விமான நிலையத்துக்கு, போகும் போது ஹெல்மெட் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் போல் இருக்கிறது.
சென்னை, திரிசூலம் விமான நிலையம், 2 ஆண்டுகளுக்கு முன், சுமார் 2,015 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டன. உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் என இரண்டுமே புதுப்பிக்கப்பட்டன.
கட்டப்பட்டு திறக்கப்பட்ட நாளில் இருந்து அங்கு திடீர் திடீர் என, மேற்கூரை தரையில் விழுந்து நொறுங்குகிவது, கண்ணாடி உடைந்து விழுவதும் சாதாரணமாக நடந்து வருகிறது.
இன்றோடு சேர்த்து மொத்தம் 34 முறை இவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளன. இதிலிருந்து, லாங் ஜம்ப், ஹைஜப், ஸ்டன் தெரிந்த பயணிகள் எப்படியோ டைவ் அடித்து தப்பித்து விடுகின்றனர்.
ஆனால், இதெல்லாம் தெரியாத அப்பாவி பயணிகள், இதில் சிக்கி காயப்படுகின்றனர். நல்ல வேளையாக இந்த விபத்துகளால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இருந்தாலும், இந்த விபத்து குறித்து, சென்று உரிய அதிகாரிகளிடம் சொன்னால், புன்னகையுடன் இதைக் கேட்டும் கேளதது போல், விட்டு விடுகின்றனராம் அதிகாரிகள். இது குறித்து திரைப்படங்களில் கூட காமெடி செய்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் மேற்கூரை தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதோடு, இங்கு செல்லும் பயணிகள் மட்டுமல்லாது, ஊழியர்களும், பாதுகாப்புப் பணியாளர்களும் கூட, என்னை அறிந்தால் படத்தில் விவேக் வருவது போல், ஹெல்மெட் அனிந்து தான் வரவேண்டும் போல என்று கிண்டலடித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment