சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்ததாக ’அட்டகத்தி’, ’மெட்ராஸ்’ படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தாணு தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினி ஒரு டான் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
தொடர்புடைய செய்திகள்: போன் செய்த சூப்பர் ஸ்டார்.. கட் பண்ணிய பாபி சிம்ஹா!
இந்நிலையில் ரஜினிக்காக தனது மொத்த கதையையும் மாற்றியுள்ளாராம் இயக்குநர் ரஞ்சித். முதலில் கதை சொன்ன போது இதில் 3 ஹீரோக்கள் இருந்தார்களாம். ஆனால், ரஜினி இதில் வந்தவுடன் 3 ஹீரோக்களை, 1 ஹீரோவாக மாற்றி, அவரை சுற்றியே கதை இருக்கும் படி அமைத்துள்ளாராம் ரஞ்சித். இந்த தகவல் உண்மையா? பொய்யா..? என்று தெரியவில்லை.
ஆனால் ஒரு தகவலை மட்டும் இயக்குநர் ரஞ்சித்து முன் நிறுத்த நினைக்கிறோம். தற்போது இருக்கும் ரசிகர்கள் ஹீரோக்களுக்காக படம் பார்க்க வரவில்லை. அந்த காலம் மாறிவிட்டது. கதையை வைத்து மட்டுமே ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். ஹீரோவுக்காக கதை மாற்றுவதை விட, கதைக்கு தகுந்த மாறி ஹீரோக்களை மாற்றுங்கள்..







No comments:
Post a Comment