Wednesday 27 May 2015

இன்றைய தினம்!!(மே 28)


மே 28
கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது!!!
கோல்டன் கேற் பாலம் அல்லது கோல்டன் கேட் பாலம் பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும்.
கோல்டன் கேட் பாலம்பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும்.
1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது.
1937 மே 28ஆம் தேதி ஃப்ராங்கிளின் ரூஸ்வெல்ட் என்பவரால் அதிகாரப்பூர்வமாக இந்த கோல்டன் கேட் பாலம் திறந்து வைக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்:
1737 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் உறுதி செய்தார்.
1905 - சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்தது.
1964 - பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1998 - பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
சிறப்பு நாள்:
பிலிப்பைன்ஸ் கொடி நாள்.

No comments:

Post a Comment