Wednesday 27 May 2015

மகனை நாய் போல நடத்தி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்ட தாய்!?


ஃபேஸ்புக்கில் மகனை நாய் போல கழுத்தில் கயிறு கட்டி நடத்தியதை புகைப்படம் எடுத்து பதிவேற்றியதைத் தொடர்ந்து அரசின் கவனிப்பின் கீழ் அந்த குழந்தை கொண்டுவரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு தாய் தனது மகனை நாயின் கழுத்தில் கயிறு கட்டி வைப்பது போல பாவித்தும், நாய்க்கு உணவு வழங்கப்படுவது போல, அவனுக்கு ஒரு கிண்ணத்தில் உணவு அளிப்பது போலவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்தினை பகிர்ந்தார்.
இது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நாட்டின் குழந்தைகள் நல அமைப்பின் கவனத்திற்கு சென்ற இந்த புகைப்படம், அவர் பதிவு செய்த இடம், ஐபி முகவரி ஆகியவை மூலம் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்த அவர்கள், குழந்தைய தங்களின் கவனிப்பில் எடுத்துக் கொண்டனர்.


மேலும், அந்த தாயை மனநல மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இது குறித்து அந்த தாய் கூறுகையில், அது வேடிக்கையாக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறியுள்ளார்.
அதற்கு, ’அது வேடிக்கை என்பது குழந்தைக்குத் தெரியாது. ஒரு குழந்தையை இப்படி செய்வது மிகவும் தவறு. அதோடு, இது வேடிக்கையாகவே இருந்தாலும் கூட, மிகவும் மோசமான ரசனை.’ என்று குழந்தைகள் நல அமைப்பின் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், ’குழந்தையை பொம்பை போல கருதி விளைடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்’ என்றும் அவர் கூறினார்.
அக்குழந்தையின் தாய் தனது ஃபேஸ்புக் கணக்கினை அழித்துவிட்ட போதும், அந்த புகைப்படத்தை ஏற்கனவே லட்சக்கணக்கானோர் தங்களது வெறுப்பினை வெளிப்படுத்த பகிர்ந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment