Wednesday 27 May 2015

அந்தரத்தில் அலைமோதிய விமானம்.. 194 பயணிகளை காப்பாற்றிய விமானி...!


சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் என்ஜின்கள் செயலிழந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. எனினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு 182 பயணிகள், 12 ஊழியர்கள் உட்பட 194 பேர் உயிர் தப்பினர்.
கடந்த சனிக்கிழமையன்று சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து ஏர் பஸ் ஏ. 330-300 என்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 182 பயணிகளுடன் புறப்பட்டது. 39 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென வானிலையில் மாற்றம் ஏற்பட்டதால் விமானத்தில் இருந்த இரண்டு இன்ஜின்களும் இயங்காமல் நின்றுவிட்டன.


இயங்க மறுத்த இன்ஜின்களை இயக்கும் முயற்சியில் முழு நம்பிக்கையோடு இறங்கினார் விமானி. சில நிமிடங்களில் அவரின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. இறந்து போனதாக கருதப்பட்ட இன்ஜின்கள் இரண்டும் மீண்டும் சீராக இயங்க துவங்கின.
இதையடுத்து, விமானத்தை ஷங்காய் விமான நிலையத்தில் அந்த விமானி பத்திரமாக தரையிறக்கினார். சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை விபத்தில் இருந்து காப்பாற்றி, 182 பயணிகளின் உயிரைக் காத்த விமானியின் செயலை பயணிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment