Monday 25 May 2015

”ஜெ., விழாவில் சசிகலாவும்.. சோனியாவும் சேர்ந்து செய்த சதி?” சாமி சர்ச்சை கருத்து..!!


சொத்து குவிப்பு வழக்கில் இருந்து மீண்டு வந்த ஜெயலலிதா கடந்த மே 23 மீண்டும் முத்லவராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவிற்கு, திரளான அ.தி.மு.க., தொண்டர்களுடன், சூப்பர்ஸ்டார் ரஜினி, விவேக், சரத்குமார் உட்பட பல திரைப்பிரபலங்களும், வந்திருந்தனர். அருண் ஜெய்ட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் சிலருக்கும், அண்டை மாநில முதல்வர்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால, அவர்கள் விழாவில் பங்கேற்கவில்லை. மத்திய அரசு சார்பில், அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் பா.ஜ.க., சார்பில், எச். ராஜா, இல கனேசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இருப்பினும், நிகழ்ச்சிக்கு சுஷ்மா, அருண் ஜெய்ட்லி வராதது பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், இது குறித்து சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார் பா.ஜ.க., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. மத்திய பா.ஜ.க., அமைச்சர்களான இவர்கள் இருவரும் வராததற்குக் காரணம், சசிகலாவும், சோனியா காந்தியும் தான் என்று டுவிட்டர் வாயிலாக சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார் சாமி.
சாமியின் டுவிட்டர் தகவல் இதோ:


டுவீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது:
மத்திய அமைச்சர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு அழைப்பிதழை அனுப்பியது. ஆனால் TDK (சோனியா) கூறியதால் சசிகலா அறிவுறுத்தலால் அவற்றை ஜெயலலிதா ரத்து செய்துவிட்டார்.
சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் சோனியாவின் பெயரை, எபோதும் TDK என்று குறிப்பிடுவது வழக்கம். ராமாயணத்தில் வரும் அசுரர் குலத்து பெண்னான ”தடாகை” (TaDaKa) என்பதன் சுருக்கமே TDK.

No comments:

Post a Comment